டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது. ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதிய சாத்விக்-சிராக் ஜோடி, முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடி அடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.இதையும் படியுங்கள் : உ.பி வாரியர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி அசத்தல்