தஜிகிஸ்தானில் நடைபெற்ற CAFA நேஷன்ஸ் கோப்பையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், FIFA வெளியிட்ட தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி 134வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயின் 11 ஆண்டுகளில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.