சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள மகளிர் தரவரிசை பட்டியலில் பெலாரசின் சபலென்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலில் போலந்தின் ஸ்வியாடெக் 2வது இடமும், அமெரிக்காவின் கோகோ காப் 3வது இடமும், அமெரிக்காவின் அனிசிமோவா 4வது இடமும் பிடித்துள்ளனர். மேலும் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி 5வது இடம் பிடித்துள்ளார்.