2026 ஐபிஎல் தொடருக்காக அணியை மறு கட்டமைப்பு செய்யும் விதமாக சென்னை அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதன்படி ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, டிவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கரன், ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், அந்த்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, சென்னை அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணியிடம் கொடுத்து, அந்த அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.