அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அணியை மறுகட்டமைக்கும் விதமாக பெங்களூரு அணி 4 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டோன், பிளெஸ்ஸிங் முசரபனி, ராசிக் தர் ஆகியோரை விடுவிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கி சாதனை படைத்திருந்தது.