தாம் விரும்பும் வழியில் விளையாடுமாறு கேப்டன் ரோகித் ஷர்மாவும், பயிற்சியாளர் கம்பீரும் தனக்கு சுதந்திரம் வழங்கியதாக மட்டையடி வீரர் ஜெய்ஸ்வால் பெருமிதம் தெரிவித்துள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.