மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21க்கு 11 என முதல் சுற்றை கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தின் போது யமாகுச்சிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார் .இதையும் படியுங்கள் : ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று