குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 14ஆவது போட்டியில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி குஜராத் அணி 3ஆவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. சோபி டிவைன் 50 ரன்களும், பெத் மூனி 38 ரன்களும் எடுத்தனர். 154 ரன்கள் இலக்குடன் ஆடிய உத்தரப் பிரதேச அணி, 17.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக போபி 32 ரன்களும், சோலி 30 ரன்கள் மட்டுமே எடுத்தனர். Related Link இங்கிலாந்து-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர்