19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16 ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதனிடையே தொடர்ந்து 3-வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.