ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், லக்னோ அணி வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை அணி டிரேடிங் முறையில் 2 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளது. இதே போல் குஜராத் அணியிடம் இருந்து 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு அதிரடி வீரர் ஷெர்பான் ரூதர்ஃபோர்டையும் மும்பை அணி டிரேடிங் முறையில் வாங்கி அசத்தியுள்ளது. இதன்மூலம் டெத் ஓவர்கள் அடிரதியாய் பேட்டிங் ஆட பொல்லார்டுக்கு பிறகு ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிடைத்துள்ளதாக மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.