பாகிஸ்தான் வெற்றி : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியில் அமெரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. பர்ஹான் 73 ரன்களும், பாபர் அசாம் 46 ரன்களும் எடுத்தனர். அமெரிக்காவின் வான் சால்க்விக் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்க அணி, 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. Related Link இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு