இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3க்கு 0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 211 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சதீர சமரவிக்ரமா 48 ரன்களை மட்டுமே எடுத்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 44.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 61 ரன்களும், பகர் சமான் 55 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.