ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு அணியை வலுப்படுத்த ராஜஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்த அணியின் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தங்கள் அணிக்கு தரும்படி ராஜஸ்தான் ராயல்ஸ் கேட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கேப்டன் பதவியை ஜடேஜா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.