காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. வதோதராவில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 14ஆம் தேதி ராஜ்கோட்டில் இரண்டாவது போட்டியும், 18ஆம் தேதி இந்தூரில் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது.இதையும் படியுங்கள் : இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை விளையாடும் வங்கதேச அணி