ரோகித் சர்மா, வீராட் கோலி, பும்ரா ஆகியோர் பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் 'ஏ' பிளஸ் கிரேடில் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போட்டியில் ஆட மறுத்ததால் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் கடந்த ஆண்டு மத்திய ஒப்பந்தபட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது மிகவும் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்த பட்டியலில் 'ஏ' கிரேடில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. பிசிசியி-ன் மத்திய ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.