உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் சாண்டோஸ் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார். செவ்வாயன்று நடந்த விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் 15 வயதுக்குட்பட்ட பிரிவு தேசிய அணியில் இடம்பெற்ற சாண்டோஸ் அறிமுகமானார். இந்தப் போட்டியில், சாண்டோஸ் இடம்பெற்ற போர்ச்சுகல் இளைஞர் அணி ஜப்பானை 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.