டேரில் மிட்செல் அபார ஆட்டத்தால் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. இதையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி டேரில் மிட்செல் 131 ரன்கள் குவித்தார்.இதையும் படியுங்கள் : "ஐபிஎல் போட்டிகளில் உள்நாட்டு வீரர்களையே ஆடவைக்கலாம்"