இலங்கை-பாகிஸ்தான் அணிகள் விளையாடவிருந்த 2வது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற இருந்தது. போட்டி நடைபெறும் இடத்தில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை தொடர்ந்ததால் போட்டி ரத்தானது.இதையும் படியுங்கள் : மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி