சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய திரிபுரா அணி தமிழ்நாட்டு வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 18புள்ளி 5 ஓவர்களில் வெறும் 143 ரன்களே எடுத்து ஆல் அவுட் ஆனது.