வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.