அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19-வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ம் தேதி முடிக்க போட்டியில் பங்கேற்கும் 10 ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறுமா? என்பது குறித்து இன்னும் முடிவு எட்டப்படாததால் தொடக்க லீக் போட்டி குறித்து முடிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.