முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16புள்ளி 2 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.