அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு, சென்னை அணி வெளியிட்ட வீடியோ ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. 44 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடந்த ஆண்டு தொடரின் கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார். தற்போது அதற்கு பதில் அளிக்கும் வகையில், One Last Time என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு சென்னை அணி பதில் அளித்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.