மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற போட்டியின், ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெகுலா 6க்கு 2, 6க்கு 3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.