அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளை வைத்துக் கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள இணை இயக்குநர்கள், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் நோயாளிகளை வைத்துக் கொண்டே மின்விசிறியை தூய்மை பணியாளர் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.