ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதிக்குள் அரையாண்டு தேர்வு நடத்தி முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.