புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறையை திரும்ப பெற்றதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சிறைகைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது, இண்டர்காம் மூலம் பேசப்படும் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக கைதிகளிடம் அச்சம் நிலவுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அந்த நடைமுறை திரும்ப பெறப்பட்டதாகவும், மீண்டும் பழைய நடைமுறை கொண்டு வரப்பட்டதாகவும் தமிழக அரசு விளக்கமளித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.