மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 98 பேர் காயம் அடைந்தனர். ஓக்சாக்கா மாகாணத்தில் உள்ள டெஹுவான்டெபெக் சந்திப்பில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.