ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 33 வயது கர்ப்பிணியான சமன்விதா தரேஷ்வர், தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது நடைபாதையை கடக்க காத்திருந்த போது கார் மீது பின்னால் அதிவேகமாக வந்த BMW கார் மோதியதில், அந்த கார் முன்னோக்கி சென்று கர்ப்பிணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவரது கணவர் மற்றும் 3 வயது குழந்தை நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இது தொடர்பாக BMW கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.