ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பால் இதுவரை 79 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அறியப்படாத நோய் காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் இது வரை 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.