ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள புகழ்பெற்ற சைனீஸ் உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காபூல் நகரின் முக்கியமான வணிக பகுதியில் ஒன்றாக கருதப்படும் ஷஹர்-இ-நவ் பகுதியில் சைனீஸ் உணவகத்தை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பயங்கரவாத தாக்குதலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : யானையை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்