ஐரோப்பியாவில் நடைபெற உள்ள கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கிய காட்சி வெளியாகியுள்ளது. ஐரோப்பியாவின் பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் நடைபெறும் 12h ஸ்பா போர்ஷே 992 கோப்பை பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், அஜித்திற்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை எனவும் அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.