ஆப்கானிஸ்தான் பதிலடி : ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு ஆபாகானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது. துராந்த் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ மையங்கள் மற்றும் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பாகிஸ்தானிய புறக்காவல் நிலையங்களைக் கைப்பற்றியதாகவும், 55 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தலிபான்கள் அரசு தெரிவித்துள்ளது. சில வீரர்கள் உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் டஜன் கணக்கான ஆயுதங்கள், ஒரு டாங்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் பதவி விலகல்