அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய இந்திய தொழிலதிபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் மூலம் விரைந்து மீட்கப்பட்ட சம்பவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குல்தீப் தங்கர் என்பவர் காரில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் வந்து மீட்டதாக தெரிவித்துள்ளார்