அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மீத் தில்லானை நியமனம் செய்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், தனது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவித்து வருகிறார். அதன்படி அமெரிக்காவில் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மீத் தில்லானை நீதித்துறையின் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக நியமித்துள்ளார்.