அமெரிக்காவில் பாம் சைக்ளோன் எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா துவங்கி கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.