வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து ஆறு புதிய சோதனை செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளதாக விண்வெளி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு ஷியான்-27 செயற்கைக் கோள்களும் மாற்றியமைக்கப்பட்ட லாங் மார்ச்-6 கேரியர் ராக்கெட்டில் ஏவப்பட்டு, முதல் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயற்கைக் கோள்கள் முக்கியமாக விண்வெளி சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.