கனடாவில் டிரக் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடு பணி நடைபெற்று வருகிறது.