கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவும் சீனாவும் செய்து கொண்டுள்ளதை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர், கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து இருதரப்பு படைகளையும் வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் முன்வந்ததை அமெரிக்க புரிந்து கொண்டதாக தெரிவித்தார். எல்லையில் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபடுவதை வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், இதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார்.