தனது மூன்று மனைவிகள் மூலம் பெற்றுக் கொண்ட 11 குழந்தைகளை தங்க வைப்பதற்காக, உலக நம்பர் ஒன் கோடீஸ்வ ர் எலான் மஸ்க், டெக்சாசில் 285 கோடியில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கி உள்ளார். 14 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவு உள்ள இந்த வளாகத்தில், இத்தாலி டஸ்கான் வில்லா மாடலில் இரண்டு வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகள் மீது ஆசைப்பட்டதால், அவற்றின் விலையை விட 70 சதவிகிதம் வரை கூடுதல் விலை கொடுத்து அவற்றை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். முதல் மனைவியான ஜஸ்டின் வில்சன் மூலம் 5 ,அடுத்த மனைவி Grimes மூலம் 3 , மூன்றாவது துணைவி ஷிவோன் ஜிலிஸ் மூலம் 3 என அவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர்.