Also Watch
Read this
By: Web Team

குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்து வேதனை அளிப்பதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா டெர் லேயன் தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும், இந்த துயரமான தருணத்தில் இந்திய மக்களுடன் இந்திய மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் துணை நிற்பதாக கூறினார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடன் மாலத்தீவு அரசும் அதன் மக்களும் உறுதுணையாக நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved