வங்கதேசத்தில் 5-ஆவதாக மேலும் ஒரு இந்து பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கேசப்பூர் உபாசிலாவில் உள்ள அருவா என்ற கிராமத்தை சேர்ந்த ராணா பிரதாப் பைராகி என்கிற இந்து பத்திரிக்கையாளர், ஜெசோர் மாவட்டத்தின் மணிரம்பூர் பகுதியில் உள்ள கோபாலியா சந்தையில் நின்றிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், அவரின் தலையில் பலமுறை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து 7 காலி தோட்டாக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ராணா பிரதாப், "பிடி கோபோர்" ((BD Khobor)) என்கிற நாளிதழின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்ததோடு, பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.