போரா புயல் தாக்கியதில் கிரீஸ் நாட்டில் உள்ள ரோட்ஸ் தீவு நிலைகுலைந்து போயுள்ளது. கோரதாண்டவம் ஆடிய போரா புயலால், கிரீஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. இதில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.