350 சதவீதம் வரிவிதிக்கப் போவதாகக் கூறி மிரட்டியே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி தன்னை அழைத்து தாங்கள் போருக்குச் செல்லப் போவதில்லை என்று கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பங்கேற்ற அமெரிக்க - சவூதி முதலீட்டு மன்றத்தில் பேசிய ட்ரம்ப், அணு ஆயுத சக்தி கொண்ட அக்கம்பக்கத்து நாடுகள் இரண்டும் அதனை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்றழிப்பதை தாம் விரும்பவில்லை என்று கூறியதாக தெரிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை தணித்ததாக ட்ரம்ப் 60 முறைக்கு மேல் கூறிவிட்ட நிலையில், இவ்விவகாரத்தில் யாருடைய தலையீடும் இல்லை என இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.