இன்றைய காலக்கட்டத்தில் தினமும் குளிப்பதையே கஷ்டமான வேலையாக கருதுபவர்களுக்காகவே, ஜப்பானில் மனிதனை குளிப்பாட்டி உலர வைக்கும் நவீன வாஷின் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மெஷினில் ஏறி படுத்ததும், வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பி, நமது தோலில் உள்ள அழுக்குகளை நீக்கும். ஒரு மனிதனை முழுமையாக குளிப்பாட்டி உலர வைக்க 15 நிமிடங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.