உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் விரைவில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரிய படைகளும் குதிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சரான Choe Son Hui மாஸ்கோ வந்துள்ளார். இதனிடையே, வட கொரிய படையினர் சிலர் ஏற்கனவே உக்ரைன்-ரஷ்ய எல்லையான குர்ஸ்க் பிராந்தியத்தில் முகாமிட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது. போரில், வட கொரிய படைகளும் சேர்ந்து கொண்டால், அமெரிக்காவிடம் இருந்து பெற்ற ஆயுதங்களையும், படைக்கலன்களையும் உக்ரைன் பயன்படுத்தலாம் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.