காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ஹமாஸின் ராணுவ வலிமையை ஒழிப்பதாக கூறி, கடந்த வாரத்தில் மட்டும் இஸ்ரேல் 670-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது. இதில் கடந்த 8 நாட்களில் மட்டும் ஹமாஸ் அமைப்பினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், திங்கட்கிழமை மட்டும் 40 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அதிகாலையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.