காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள குடியிருப்புகளும், கட்டடங்களும் சின்னாபின்னமாக காட்சியளிக்கின்றன. போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.