இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவலை பகிர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், எந்த நாட்டின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதற்கு வழக்கம் போல் பதில் கூறாமல் சென்றார். மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் அவர் உரையாற்றினார். இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை ஏற்கனவே 50ஐ கடந்த நிலையில், மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தாம்தான் என மீண்டும் தெரிவித்துள்ளார்.