அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நகை கடைக்குள் புகுந்து முகமூடி கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை சுருட்டிக்கொண்டு தப்பிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அப்போது, கடையின் உரிமையாளர் தனது துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கி ஐந்து முறை சுட்டபோதிலும் கையில் கிடைத்தவற்றை திருடிக்கொண்டு தலைத்தெறிக்க ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.